இந்தியா

தமிழ்நாட்டின் வளங்களை கேரள அரசு கொள்ளையடிக்கின்றது!; பிரேமலதா கண்டனம்

தமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு, கேரளாவிற்குக் கடத்திச் செல்லப்படுகின்றன.

அத்துடன் கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவு, குப்பைகள், எலக்ட்ரோனிக் கழிவுகள், போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் தொன் கணக்கில் கொட்டப்படுகின்றன.

எல்லைகளைப் பாதுகாக்காமல் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்து தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்த அரசின் செயற்பாடுகள் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

பக்கத்தில் இருக்கும் கோளா அனைத்து வளத்தோடும், சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கும் குப்பைகளை இங்கு கொட்டுவதற்கு யார் அனுமதி வழங்கினார்கள்? அரசாங்கத்தின் அதிகாரிகளும், சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்களும் என்ன செய்கின்றனர்? இந்த அளவிற்குக் கேவலமான நிகழ்வுகள் தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன. இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. இது மிகமிக கண்டிக்கத்தக்க விடயம்.

தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் நாட்டிற்கே அந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிய கேரள அரசைக் கடுமையாக கண்டிக்கிறோம்” இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.