முச்சந்தி
மாகாண சபைத் தேர்தல்; பொதுஜன பெரமுன தயார்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாணசபை பிரதிநிதிகள் குழு ஒன்று கூடியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்களுள் தற்போது உயிரிழந்தவர்கள் , வெளிநாடு சென்றுள்ளவர்கள் மற்றும் கட்சியை விட்டு விலகியிருப்பதால் அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாதம் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், கட்சிப் பணிகளை மிக விரைவில் ஆரம்பித்து தேர்தலை வெற்றியுடன் எதிர்கொள்வதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
![]()