யாழில் மாவீரர் நினைவாலயம் விசமிகளால் உடைத்துச் சேதம்
யாழ்ப்பாணம் நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் ஒருவரின் நினைவாலயம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயமே இவ்வாறு விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்1985ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்திருந்த நிலையில் அவரது நினைவாலயம் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மாவீரர் நாளன்று மாலை 6.05 மணிக்கு அந்த நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மறுநாள் (28) காலை இந்த நினைவாலயம் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஊர்மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
![]()