நெடுந்தீவில் இருந்த நோயாளர்கள் ஹெலி மூலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு வருகை
நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 3 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
![]()