செல்லக் கதிர்காமம் நீரில் மூழ்கியது !

மொனராரலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் மாணிக்க கங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செல்லக் கதிர்காம் கோயில் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

மேலும் கும்புக்கன் ஓயா மற்றும் மாணிக்க கங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல வயல் நிலங்கள் நீர் மூழ்கியுள்ளன.

அதேவேளை நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் பிரதேசத்தில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பலர் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது .

இவர்களை மீட்கவென உடன் செயற்பட்ட இராணுவம் மற்றும் விமானப் படையினர் இயந்திர படகுகள் மூலம் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் மாணிக்க கங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செல்லக் கதிர்காம் கோயில் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *