முன்னாள் அமைச்சர்கள் நால்வரிடம் சி.ஐ.டி. விசாரணை

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கைக்குள் தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேலும் 4 முன்னாள் அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, நளின் பெர்னாண்டோ, நசீர் அஹமட், விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் இவ்வாறு ஆஜராகியிருந்தனர்.

இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினர்.

தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம அனுமதியளித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *