தி.மு.கவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்; பொன்னாடை போர்த்தி கௌரவம்
சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் சுமார் 200 இற்கும் அதிகமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர்.
தி.மு.கவில் இணைந்தவர்களை பொன்னாவை அணிவித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் மற்ற நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியல் கூறியிருப்பதாவது,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நாங்கள் சரியான தலைமையின் கீழ் இயங்கும் கட்சியில் சேர நினைத்தோம்.
அதன்படி, சுமார் 25 வருடங்களுக்கும் அதிகமாக சரியான, வலுவான தலைமையிலுள்ள தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் தற்சமயம் நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது.
அவரது சிரித்த முகம் அனைவரையும் ஈர்க்கிறது.
அதன் காரணமாக நாங்களும் தி.மு.கவில் இணைந்துகொண்டோம்.
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பலரும் அதிருப்தியுடன் தான் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.கவில் இணைந்து கொள்வார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.