செய்திகள்

வலி வடக்கில் 34 வருடங்களின் பின்னர் ஆலய வழிபாட்டுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி..!

வலிகாமம் வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  முதல் பலாலி, வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.