தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் சத்தியலிங்கம்

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது, கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக நீண்ட வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றது.

இறுதியில் இந்த தேசிய பட்டியல் ஆசனத்தை, வன்னி தேர்தல் மாவட்டத்தில் இம்முறை போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டது என சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button