இந்தியாவின் அசாதாரண தட்பவெப்பம்: 3,238 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் அசாதாரண தட்ப வெப்பத்தின் காரணமாக கடந்த 9 மாதங்களில் 3200 பேர் உயிரிழந்திருப்பதோடு 2.3 இலட்சத்துக்கும் அதிக வீடுகள் சேதமடைந்துள்ளன.
டில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் அண்மையில் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இத் தகவல் வெளிவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் 274 நாட்களில் 255 நாட்கள் அசாதாரண தட்ப வெப்ப நிலையை இந்தியா சந்தித்துள்ளது.
இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் 2,35,862 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
3,238 பேர் உயிரிழந்துள்ளனர். 9,457 கால் நடைகள் உயிரிழந்துள்ளன. 32 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 273 நாட்களில் 235 நாட்கள் அசாதாரண தட்ப வெப்ப நிலையைச் சந்தித்தன.
இதனால், 2,923 பேர் உயிரிழந்திருப்பதோடு, 92,519 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 80,293 வீடுகள் சோதமடைந்துள்ளன. 18.4 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.