3 திருமணங்கள், 5 பிள்ளைகள்: ட்ரம்பின் குடும்பம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மனைவி பெயர் மெலானியா என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால், மெலானியா, ட்ரம்பின் மூன்றாவது மனைவி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மூன்று திருமணங்கள், ஐந்து பிள்ளைகள்…
முதல் திருமணம்
ட்ரம்பின் முதல் மனைவியின் பெயர், இவானா மேரி ட்ரம்ப். செக் – அமெரிக்க பெண்ணான இவானா, 1976ஆம் ஆண்டு, ஒரு கூட்டம் மொடல்களுடன் இருந்த ட்ரம்பை சந்தித்தார். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இவானாவும் ஒரு மொடல் மற்றும் தொழிலதிபர்தான்.
திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில், ட்ரம்புக்கு மற்றொரு மொடலான மார்லா மேப்பில்ஸ் என்னும் பெண்ணுடன் தவறான உறவு இருப்பதை இவானா அறிந்துகொள்ள, 1990ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
2022ஆம் ஆண்டு, தனது 73ஆவது வயதில், நியூயார்க்கிலுள்ள தனது வீட்டில் மரணமடைந்தார் இவானா.
இரண்டாவது திருமணம்
ட்ரம்பின் இரண்டாவது மனைவியின் பெயர் மார்லா மேப்பில்ஸ். ஆம், ட்ரம்ப் முதல் மனைவியுடன் வாழும்போதே தவறான உறவு வைத்திருந்த மார்லாவுடன், அவரைப் பிரிந்த பிறகும் தொடர்ந்து வாழ்ந்துவந்தார்.
இருவருக்கும் டிஃபனி என்ற ஒரு மகள் பிறக்க, அதற்குப் பின்பே இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
மூன்றாவது திருமணம்
இரண்டாவது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்துவந்த ட்ரம்ப், 1998ஆம் ஆண்டு ஃபேஷன் ஷோ ஒன்றில் ஸ்லோவேனியாவில் பிறந்தவரான, மெலானியா நாஸ் என்னும் மொடலை சந்தித்தார்.
தன்னுடன் ஒரு பெண் இருக்கும்போதே மெலானியாவின் மொபைல் எண்ணை ட்ரம்ப் கேட்க, அவருடன் ஏற்கனவே ஒரு பெண் இருந்ததால், தனது மொபைல் எண்ணை ட்ரம்புக்கு கொடுக்க மறுத்த மெலானியா, ட்ரம்பின் எண்ணை வாங்கிக் கொண்டார்.
ட்ரம்ப் மெலானியா தம்பதியர் 20 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவரும் நிலையில், தம்பதியருக்கு பாரன் ட்ரம்ப் என்னும் ஒரு மகன் இருக்கிறார்.