உத்தரகாண்ட்டில் 200 பள்ளத்தில் விழுந்த பேருந்து; 23 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ராம்நகர் அருகே பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பேருந்தில் அதிக சுமை ஏற்றப்பட்டதாகவும், இந்த விபத்தில் பல குழந்தைகளும் கொல்லப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் இருந்து குமாவோனுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேருந்து குமாவோன் அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தினார்.
உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்பு குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்ல தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.