இலங்கை

ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளிப்பு

ஜே.வி.பி.யின் அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் நிராகரிப்புக்கு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமான நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றத்தேர்தல் -2024இற்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறை இனக்கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது.

அரசு எவ்வித பாதுகாப்பையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கவில்லை, இச்சந்தர்ப்பங்களில் நாட்டின் ஏனைய பாகங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலம்ரூபவ் கடல் மற்றும் வான் வழியாக வடக்குக் கிழக்கிற்கு அன்றைய அரசாங்கங்களினால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்மூலம் இவ்விரு மாகாணங்களையும் தமிழர் தம் தாயகமாகவும் அங்கு தான் தமிழர்களுக்கு பாதுகாப்பு உண்டு எனவும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டது ஆனால் தற்போது வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே நிலைமை.

இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் “தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும்” புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு மக்களின் முன்னிலையில் சர்வஜன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும் அதே நேரத்தில் மக்கள் தேசிய விடுதலை முன்னணியின் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா 13ஆவது திருத்தச் சட்டமும் அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமானவை அல்ல அவர்களுக்கு அவர்களின் பொருளாதார பிரச்சினைக்கே தீர்வு அவசியமாக உள்ளது.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த விடயங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றார். இவ்வறிவிப்பையிட்டு நாம் ஆச்சரியப்படவில்லை. ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளரின் அறிவித்தலுக்கு நாம் எமது கட்சியின் தேர்தல் அறிக்கையின் மூலமாகவே பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவோம் என்று இதுவரை காலமும் கூறி வந்த தேசிய மக்கள் சக்தி தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதற்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

தமிழ் அரசியல் தலைமையானது தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு பெருமளவு தன்னாட்சி அதிகாரத்தினை வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டினை பெற காலங்காலமாக பலமுறை முயற்சி செய்தது.

அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் தேசிய இனப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாதிருக்கின்றது.

2002 பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளும் அன்றைய இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதோடு 2002 டிசம்பரில் ஏற்பட்ட ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் கண்டன அக்கோட்பாடு ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள ; தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டி கட்டமைப்பின் அடிப ;படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’ என்பதாகும்.

சர்வதேச நியமங்களின் படியும் சர்வதேச சாசனங்களின் பிரகாரமும் தமிழர்களாகிய நாங்கள் தனிச் சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். ஒரு மக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுதந்திரமாகவும ; அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம்.

இதனால் தனித்துவமான மக்களாகவும் தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும் எமக்குரிய எமது ஒருமித்த உரிமைகள் தொடர்பிலும் மேலும் எமது தலைவிதியை அல்லது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பதற்கு எமக்கிருக்கும் உரிமை தொடர்பிலும் அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டதும் பிளவுபடாததுமான இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு-கிழக்கில் தக்க தன்னாட்சி முறைமை ஒன்றை நடைமுறைப ;படுத்துவது தொடர்பிலும் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றோம்.

இவை தொடர்பிலான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் பொருத்தமற்றதாகவும் திருப்தியற்றதாகவும் அமைந்துள்ளன. தற்போதுள்ள ஏற்பாடுகள் பெரும்பான்மை மக்களுக்குச் சார்பானதாகவும் அவர்களது ஆதிக்கத்தை தமிழர் மீது திணிக்கும் வகையிலுமே அமைந்துள்ளன. நீதிரூபவ் சமத்துவம் சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் ஓர் அரசியலமைப்புக் கட்டமைப்பின்றி பல்லின சமூகம் ஒன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தி அதற்கு மேலாக அர்த்தமுள்ள ‘அதிகாரப் பகிர்வினை கட்டியெழுப்பும்’ என தொடர்ந்து உறுதிமொழி அளித்தது.

இவ்வாக்குறுதிக்கமைய 2015இல் இந்திய பிரதமர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது ‘எமது சமூகத்தில் உள்ள அனைத்து பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம் நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்தியையும் நமது நாடு உள்வாங்கிக்கொள்ளும். மாநிலங்கள் மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டப படும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும். கூட்டுறவு சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்’ என்பதையும் குறிப்பிட்டார்.

இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு; அரசிடம் அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியாக வலியுறுத்துகின்றது. தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடம் அல்லரூபவ் தமிழ் மக்களிடமே பொதிந்திருக்கின்றது.

இதனடிப்படையில் மத்திய அரசிடமும் அதன் முகவரான ஆளுநரிடமும் அதிகாரங்களைக் குவிக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டம் முற்றிலும் பிழையானதொன்று.

எதேச்சாதிகார அரசிற்கு விடுக்கும் அடிப்படை ஜனநாயகச் சவாலின் மீதே எமது அரசியல் சித்தாந்தம் வேரூயஅp;ன்றி நிற்கின்றது.

இந்த நோக்கம் நாடளாவிய ரீதியில் செயற்படுவதற்கென நாம் கடந்த 2015 ஜனவரி 8இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது மாபெரும் பங்களிப்பை வழங்கியிருந்தோம். ஆகவே எமது அரசியலானது அனைத்து மக்களதும் தேவைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளோடும் தமிழ் பேசும் மக்களது நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது.

இந்த பின்புலத்திலேயே நாம் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு இராஜதந்திரத்தை பதிலாக இந்திய நாட்டின் முக்கியத்துவமிக்க அணுகல் முறையும் இரு நாடுகளின் தமிழ்த்தேச மக்கள் இராஜதந்திரமும் செம்மையாக கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும்.

இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அத்தியாவசியம் எனக் கருதும் கோட்பாடுகளும் பிரத்தியேக அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத்தீவில் வாழும் பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்களைப் பங்கிடுவதனூடாக பகிர்ந்த இறையாண்மையினை உறுதிப்படுத்தலைக் குறித்தது.

உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான அபிவிருத்தியையும் எய்துவதற்குப் பின்வரும் அதிகாரப் பங்கீட்டு அடிப்படைகள் முக்கியம் பெறுகின்றன.

ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்புக்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது வடக்குக்கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம்.

ஒன்றுபட்டதும் பிளவுறாததுமான இலங்கைக்குள் வன்முறையற்ற சமாதானமான வழிமுறைகளில் அமைந்த பேச்சுவார்தையூடாக நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளினதும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள் என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.