இந்தியா

“இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்”

திராவிட இயக்கத்தால் தான் மாநில மொழிகள் நிலைத்திருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கேரளம் மாநிலம், கோழிக்கோட்டு பகுதியில் மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய காச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.

இதில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது. இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. அதில், இந்தி திணிப்புக்கு எதிராக இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது.

சமத்துவத்திற்கு எதிராகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனை மாற்றியது நீதிக்கட்சிதான்.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. அண்ணா, கலைஞர் கருணாநிதி திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

தமிழ்நாடு மற்றும் கேரளாவும் தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்திற்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.