’ரஷ்யா- உக்ரைன் போரை இந்தியாவால் நிறுத்த முடியும்’
ரஷ்யா- உக்ரைன் தங்களது போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதங்களில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் சென்ற இந்திய பிரதமர் மோடி, போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தினார்.
அண்மையில், ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்ற மோடி, “இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், தற்போது பேசியுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் செல்வாக்குமிக்க தலைவராக மாறியுள்ளார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.