கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர்!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் யாழ். மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து  இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button