முச்சந்தி

தேர்தல் செலவின அறிக்கைகள் பொதுமக்களின் பார்வைக்கு…

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களால் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவின அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் இப்போது பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களை ஒருங்கிணைத்த வாக்காளர்கள் ஆகியோரால் ஒப்படைக்கப்பட்ட இந்த அறிக்கைகள், 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவுச் சட்டம் இல. 3 இன் பிரிவு 03 இன் படி தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 24, 2024 முதல் வார நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த அறிக்கைகளை பொதுமக்கள் மதிப்பாய்வு செய்யலாம்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button