ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட படகு விபத்து; 65 பேர் மீட்பு!

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை நோக்கிச் செல்ல முற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் 65 பேர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தனர்.

இந்த விபத்தானது பிரான்சின் விசான்ட் கடற் பகுதியில் பதிவாகியுள்ளது.

படகில் அதிக சுமை ஏற்றப்பட்டமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பக் கட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

விபத்தின் பின்னர்,சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மீட்பு குழுவினர் நீதில் தத்தளித்த 65 பேரை காப்பாற்றினர்.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆங்கில கால்வாயில் அண்மைய வருடங்களில் 2024 ஆம் ஆண்டை மிக மோசமான கப்பல் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் அங்கு ஏற்பட்ட இதேபோன்ற ஒரு படகு விபத்தில் 2 வயது குழந்தை உட்பட நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button