மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் தீவிர அவதானம் செலுத்தியுள்ள அரசாங்கம்: இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்தப் பிராந்தியத்தில் பணிப்புரியும் இலங்கையர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதலின் தீவிரம் லெபனானில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இப்பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பணிபுரிவதைக் கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிப்படுத்த ஏற்கனவே அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அறிவுறுத்தல்களும் இலங்கை தூதரகங்களால் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதற்கேற்ப செயற்பட வேண்டும்.

மேலும், மத்திய கிழக்கில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் தனது நெருங்கிய உறவினருக்கு அவசர நிலை ஏற்பட்டிருப்பின் அது பற்றிய தகவல்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 011 – 2338812, 011 – 7711194 இற்கு தொடர்பு கொள்ளலாம்.” என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button