மருத்துவ அறிக்கையைவெளியிட்ட கமலா ஹாரிஸ்: ட்ரம்புக்கு வந்த மற்றுமொரு நெருக்கடி

ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை கமலா ஹாரிஸின் வைத்தியர் ஜோசுவா சிம்மன்ஸ் அளித்துள்ளார். இந்த அறிக்கையில் கமலா ஹாரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கமலா ஹாரிஸ் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார்.

அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். அவர் புகையிலை மற்றும் அல்கஹோலை பயன்படுத்துவதில்லை.

அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளதால் மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.

கமலா ஹாரிஸுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நிலை குறித்த விரிவான தகவல்களை வெளியிட மறுத்து வரும் நிலையில் கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளமை ட்ரம்புக்கு மற்றுமொரு நெருக்கடியாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button