கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்று ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை ஏ.ஆர். ரகுமானுடன், உலகத் தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாட உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சிக்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் போல் ஏ.ஆர்.ரகுமான் தரப்பிலும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </div>

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button