தேர்தல் களம்

பொதுத் தேர்தல்; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி யாழ். மாவட்ட வேட்புமனுக்கள்    தாக்கல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி. என்பனவற்றின் பொதுத் தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பு மனுக்கள் நேற்று கட்சியின் தலைவர்களால் தாக்கல் செய்யப்பட்டன.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர் வரும் நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஈ.பி.டி.பியின் வேட்புமனுவை அக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும், த.தே.ம.முன்னணியின் வேட்புமனுவை அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தாக்கல் செய்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி.) வீணைச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களமிறங்குகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *