இந்தியா
இந்தியாவில் 200 நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் சாம்சுங்
இந்தியாவில் 200 நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் சாம்சுங்
சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் தனது இந்திய செயல்பாடுகளில் 200 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வணிக வளர்ச்சி குறைதல், நுகர்வோர் தேவை குறைதல் மற்றும் நிறுவனத்தின் முக்கிய ஸ்மார்ட்போன் பிரிவில் சந்தை பங்கு இழப்பு ஆகியவற்றின் விளைவாக இந்தப் பணி நீக்கம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கங்கள் செலவுகளைக் குறைத்தல் மற்றும் லாபத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட தொழில்துறை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்தப் பணி நீக்கமானது இந்தியாவில் உள்ள சாம்சுங்கின் நிர்வாகப் பணியாளர்களில் 9-10 சதவிகிதத்தை பாதிக்கிறது.
தற்போது சாம்சுங், இந்தியாவில் சுமார் 2,000 நிர்வாகிகளைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடதத்கக்து.