சஜித்திற்கு ஆதரவு உறுதி: தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தேவையில்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை இம்மாதம் 14ஆம் திகதி மீண்டும் கூட்ட வேண்டியதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட தமிழரசுக் கட்சியின் குழு இன்று கூடியபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அத்தீர்மானம்  கூட்டத்தின் போது உறுதிசெய்யப்பட்டதாகவும் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள விடயங்களை அமுலாக்குவதற்கான கால வரையறைகள் குறித்து கலந்துரையாடி இறுதி செய்யவும் தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாசவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் வைத்துச் சந்திப்பார் எனவும், அதன்பின் மீண்டும் குறித்த 5 பேர் கொண்ட குழு கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button