வொஷிங் மெசினில் கிடந்த 3 வயது சிறுவனின் சடலம்!

முன்பகை காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்து வொஷிங் மெசினில் அடைத்த சம்பவமொன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் சிறுவன் காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர்கள் குழந்தையை தேடி உள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதனால் குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் ராதாபுரம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பொலிசார் அப்பகுதியில் விசாரிக்கும் போது குழந்தை எதிர்வீட்டை சேர்ந்த தங்கம் என்ற பெண் வீட்டுக்குள் சென்றதை சிலர் கூறியுள்ளனர்.

எனவே, பொலிசார் அங்கு சென்று பார்த்தபோது குழந்தையை கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்து, வொஷிங் மிசினில் வைத்திருந்தது பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தினர். பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக தங்கம், குழந்தையை மிக கொடூரமாக கொலை செய்து வொஷிங் மெசினில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் பொலிசார் தங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 3 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button