யாராலும் கண்டுபிடிக்க முடியாத இயற்கையின் மர்மம்
மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் இந்த Taos Hum. இந்த சிறிய கிராமத்தில் அடிவானத்தில் ஒரு வினோதமான சப்தத்தை கேட்க முடிகிறது.
அதாவது தூரத்தில் ஒரு டீசல் என்ஜின் இயங்குவது போல. இதை வெறும் காதுகளில் கேட்க முடிகிறதே தவிர சப்தத்தை உணரக்கூடிய வேறு எந்த கருவிகளிலும் இதை பதிவு செய்ய முடிவதில்லை. அங்கே அருகில் வசிக்கக்கூடிய மக்கள் இதை உணருகிறார்கள்.
திறந்த வெளியில் உள்ளதை விட வீட்டினுள் இது அதிகமாக கேட்பதாக சொல்கின்றனர். ஒலி அதிவெண்களை ( frequency ) ஆய்வு செய்யும் பலரும் இதை ஆராய்ந்து விட்டனர், இருந்தும் இந்த சப்தம் எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் விடை கிடைக்காத மர்மமாக உள்ளது.
மேலும் இந்த சப்தம் இடையூறாக இருப்பதாகவும் மக்களால் அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைவலி, மனஅழுத்தம் மற்றும் சில பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இதற்காகவே சில பேர் மாத்திரையின் உதவியை நாடி உள்ளனர். இந்த சிறிய நகரத்தில் இந்த சப்தம் இன்னும் ஓர் தீர்க்கப்படாத மர்மமாக உள்ளது.