காசாவில் தாக்குதல்: 30 இற்கும் மேற்பட்டோர் பலி

காசாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்படி இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரையுடன் ஜோர்டானின் எல்லைப்பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button