ஜம்மு-காஷ்மீரை மீண்டும் பயங்கரவாத நெருப்புக்குள் தள்ள முயற்சி: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீரில் எதிர்வரும் செப்டம்பர் 18,25 மற்றும் அக்டோபர் 1ஆம் திகதிகளில் சட்டப்பேரவை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 8ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அமைச்சர் அமித் ஷா, பாஜகவுக்கு ஆதரவளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் கோரினார்.
அமித் ஷா பேசியதாவது,
“பயங்கரவாதத்தின் சுமையைக் காஷ்மீர் பல ஆண்டுகளாக தாங்கிக் கொண்டிருந்தது. மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில்தான் பயங்கரவாத சம்பவங்கள் 70 சதவிகிதமாகக் குறைந்தது.
காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் ஒருபோதும் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை அமைக்க முடியாது. ஜம்மு-காஷ்மீருக்கு சுயாட்சியை மீண்டும் கொண்டுவரும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அது ஒருபோதும் மீட்டெடுக்கப்படாது. எந்த சக்தியாலும் சுயாட்சி பற்றி பேச முடியாது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதாக, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் கூறுகின்றன. தேசிய மாநாடு கட்சித் தலைவர் அப்துல்லா சஹாப் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கேட்க விரும்புகிறேன், நீங்கள் அதை எப்படி திருப்பித் தர முடியும், சொல்லுங்கள்?
யார் மாநில அந்தஸ்தை கொடுக்க முடியும்? மத்திய அரசும், பிரதமர் மோடியால் மட்டுமே செய்ய முடியும். மாநில அந்தஸ்து என்ற பெயரில் மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்.
தேர்தலுக்குப் பிறகு சரியான நேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திருப்பித் தருவோம் என்று நானே கூறியுள்ளேன். இதை நான் எந்தவொரு பொதுக் கூட்டத்திலும் சொல்லவில்லை. ஆனால் மக்களவையில் சொல்லியிருக்கிறேன்.
காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும், ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாத நெருப்புக்குள்தான் தள்ள விரும்புகின்றன.’’ என்று தெரிவித்துள்ளார்.