“நீதி வேண்டும்“ மெழுகுவர்த்திகளால் அடுக்கி வைக்கப்பட்ட வாசகம்; கொல்கத்தாவில் போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக் கொலை தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்பவர்களுக்கு தகுந்த தண்டனையளிக்க வேண்டும் எனவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன்படி ஆர்ஜிகர் மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடியுள்ளனர்.
நீதி வேண்டும் என்ற வாசகத்தை மெழுகுவர்த்திகளால் அடுக்கி வைத்து கோஷம் எழுப்பினர்.
அதேபோல் கொல்கத்தா ஆளுநர் மாளிகையிலும் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.