கவிதைகள்
யாழன்… கவிதை… கீதா கபிலன்
எல்லையற்ற
பெருவெளியில்
தொடர்ந்து செல்கிறது
நம் பயணம்…
வழி நெடுகிலும்
வண்டுகளின் ரீங்காரமாய்
வாழ்த்து
மழை தூவுகிறது வானம்…
சிரித்துக் கொண்டே யாழா…
யாழின் இசையென
இசைத்து கிடைக்கிறது
பெருமழை…
இடியும் மின்னலுமான
பொழுது ஒன்றில் தான்
உன் நினைவுகளும்
உதயமானது யாழா…
இருண்டகாலமாய்
இருண்டு கிடந்த
என் நாட்களில்
நீயே ஒளியும் ஆனாய்…
அந்த வெளிச்சத்தில்
ஜொலிக்கின்ற
வெண்ணிலாவாய்
உன் முகம்…
மரங்கொத்தி பறவை என
மனம் கொத்திப் போன மாயம்
தெரியாமல்
நீ வந்த திசையில்
திரும்பிப் பறக்கிறது
என் மனது…
கொஞ்சம் திரும்பிப் பாரேன்…
கீதா கபிலன்