இந்தி கற்பதில் தமிழகம் முதலிடம்; பரவாலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களின் தேர்வு
தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் அதிகளவானோர் இந்தி மொழியை கற்றுக்கொள்வதாக இந்தி பிரச்சார சபா தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.இந்தி கற்கைக்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தாலும். விருபத்துடன் கற்றுக் கொள்பவர்களுக்கு தடையில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்னிந்தியாவில் இந்தியை அதிகம் கற்பவர்களின் மாநிலமாக தமிழகம் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபாவின் மூலம் இந்தி கற்க விரும்புபவர்களுக்கு பயிற்சியளித்து தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தி மொழியில் தேர்ச்சி பெற மொத்தம் 08 தேர்வுகளை எழுத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு நிலைக்கேற்ப சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த தேர்வுகளை இந்தி பிரச்சார சபா ஆண்டுக்கு 02 முறை நடத்துகிறது. அந்தவகையில் நடப்பாண்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து 4 லட்சத்து 73,650 பேர் இந்தி தேர்வை எழுதியுள்ளனர்.
இவர்களில் தமிழகத்தில் மாத்திரம் 03 லட்சத்து 54,655 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.