தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளநிலையில் இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு பதிலாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், இம்மாதம் 1 ஆம் திகதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.