சட்டென சீறிப் பாய்ந்த ராட்சத மலைப்பாம்பு: கவனமாக கையாண்ட காப்பாளர்

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும். அதிலும் மலைப்பாம்பைப் பார்த்தால் சொல்லவா வேண்டும்.

அந்த வகையில், பெரிய மலைப்பாம்பு ஒன்று சரணாலய காப்பாளரான மிஸ்டர் ப்ரூவரின் முகத்தை நோக்கி பாயும் வீடியோவொன்று வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த காப்பாளர் பெட்டியிலிருக்கும் ராட்சத மலைப்பாம்பை கையாள முயற்சிக்கையில், அது சட்டென அவரது முகத்தில் சீறிப் பாய்ந்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எனது கண்களைத் திருப்பியதும் இந்தப் பெரிய பெண் மலைப்பாம்பு என்னைத் தாக்கியது. பாம்புகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படுகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button