தேசிய கொடியேற்றிய தமிழக முதலமைச்சர்; ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம்
இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி பல்வேறு விருதுகளை வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் டொக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது சந்திரயான் 03 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேலுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கும் முதலமைச்சர் வழங்கினார்.
இதன்போது உரையாற்றிய முதலமைச்சர்,
தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம்.
ஒகஸ்ட் 15 சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும்.
சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட அரசு செயலாற்றி வருகிறது.
வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என்றார்.