கவிதைகள்
வேகத்தடைகளை மதிக்காமல்… கவிதை…. யாழ் எஸ் ராகவன்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட
பெருநகரம்
கருப்பு துணி போர்த்திய நேரம் –
வானவில் உடுத்தியிருந்த
முதியவளின் புன்னகை
ஆயசம் நிறைந்தது
பேரம் முடிந்த சம்போகத்தின்
தடையாக தொங்கியபடி
வெளிச்சம் கசிகிறது சோடியம் விளக்கு
கூடுதலாக வருமானம்
எதிர்பார்த்த ஆட்டோ ஓட்டுநர்
சாவுகிராக்கி ஒருவனின் வாந்தியை
அலசிச்சிச் செல்கிறான்
பொதுக்கழிப்பிடத்தில்
குறி வரைந்த வக்கிரத்தின்
கரிக்கோட்டு எண்கள்
யாருக்கனவை
வேகத்தடைகளை
மதிக்காமல் சீறிப்பாய்கிறது
நான்கு வழிச்சாலை மிருகம்
சாக்கடையில் மிதக்கும்
வெள்ளி மோதிரம்
சுயத்தை மறைத்த கணத்தில்
எல்லோருக்கும்
நல்லிரவு
– யாழ் எஸ் ராகவன்