பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பதிவு செய்யப்படும்: டெல்லி உயர் நீதிமன்றம்
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஆண், பெண் என்ற பாலின பாகுபாடின்றி பெண்கள் மீதும் போக்சோ (Pocso)சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டம் போக்சோ.
இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல், ஏதேனும் பொருள் அல்லது உடல் உறுப்பை குழந்தைகளின் உடலில் உள்நுழைத்தல் ஆகியவற்றை குறிக்கிறது.
கடந்த வாரம் பெண் ஒருவர் அவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை எதிர்த்து வாதிட்டார். இதன்போதே நீதிபதி இக் கருத்தை தெரிவித்ததோடு, குறித்த பெண் தாக்கல் செய்த மனுவையும் ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் ஆண் மீது மட்டுமின்றி பெண்கள் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்படும் எனும்போது குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கலாம்.