இமாச்சலப் பிரதேச கன மழையில் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு: பலி எண்ணிக்கை 28 ஆய உயர்ந்தது
இமாச்சலப் பிரதேசத்தில் மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா, இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூலை 31ஆம் திகதியன்று ஏற்பட்ட மேக வெடிப்பினால் கன மழை பெய்தது.
இதனால் அப் பிரதேசத்தைச் சேர்ந்த சிம்லா, குல்லு, ராம்பூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு 30க்கும் அதிகமான மக்கள் காணாமல் போனார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது 9 நாட்களின் பின் நேற்று வெள்ளிக்கிழமையன்று சிம்லா மாவட்டம், டோக்ரி பகுதியில் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களுள் 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்ளடங்குவர்.
அத்துடன் நோக்லியிலிருந்தும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. மொத்தமாக நேற்று வெள்ளிக்கிழமை 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால் இதுவரையில் இமாச்சலப் பிரதேசத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.