புத்தகத்தை காதலித்துப் பாருங்கள்…. கவிதை…. கீதா கபிலன்
புத்தகத்தை
காதலித்துப் பாருங்கள்
வாழ்க்கையை அழகாக்கும்…
புத்தகத்தை
காட்சிப்படுத்தி பாருங்கள்
கனவுகள் நிஜமாகும்…
புத்தகத்தை
வாசித்துப் பாருங்கள்
வாழ்க்கையே அழகாக்கும்…
புத்தகத்தை
நேசித்துப் பாருங்கள்
நினைவுகள் எல்லாம்
புத்தகமாகத் தெரியும்…
கவலைகள் எல்லாம்
கனவாக தெரியும்….
நிகழும் நொடிகளில்
யாரோ ஒரு வழித்
துணையாய்
நம்மை அழைத்துச் செல்லும்…
புரியாத நேரங்களில்
நம்மோடு
புது புது கதைகள் பேசும்…
அறிவோடு விளையாடும்
உணர்வோடு
கலந்துவிடும்
உயிரோடு
ஊடுருவும்
காலங்களை படம் பிடித்து காட்டும்
இயற்கையை
கண் முன் நிறுத்தும்
வட்டார வழக்குகளை
அழகாய் எடுத்து
இயம்பும்….
ஏதேதோ
மாயம் செய்து
நம் கைகளில் வந்து
அமர்ந்து கொள்ளும்…
கண்களின்
காட்சியாய்
உணர்வில் கலக்கும்…
நாம் நினைத்துப் பார்க்காத விஷயங்களை
நிஜமாக்கி காட்டும்..
புத்தகம்
ஒரு வழிகாட்டி மட்டுமல்ல
மனம் சோர்ந்து போகும் போது
தோள் கொடுக்கும்
நல்லதொரு
நண்பன்….
சாய்ந்து கொள்ள
நல்லதொரு தாய்மடி…. புத்தகம்…
புத்தகம்
வாசிக்க வாசிக்க
மனம் ஒரு பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும்…
கீதா கபிலன்