பெண்மையின் அழகு…. கவிதை…. ஜாஸ்மின்
பெண்மையின் அழகு
பிரம்மனும் கண்டு பிரம்மித்தான்
பெண்மையின் அழகினை
கண்ட பின்பு!,
சிற்பியும் செதுக்க தயங்குவான்
இவளிண் சிலையை
கண்ட பின்பு,
ஓவியனும் வரைய தயங்குவான்
ஒளி வீசும் இவளின் முகத்தை
கண்ட பின்பு,
பாடல் ஆசிரியனும்
பைத்தியமாவான் இவளின்
பார்வையில் விழுந்தால்,
வார்த்தைகள் இருந்தும்
வர்ணிக்க முடியாது! இவளின்
வட்ட முகத்தை கண்டால்,
பூக்களும் வாசம்வீச மறுக்கும் இவள்
சுவாசிக்கும் அழகினை கண்டால்,
மலர்களும் மலர தயங்கும்
இவளின் மைவிழியைக் கண்டால்,
பாதைகள் எல்லாம் பார்த்து ஏங்கும்
நானமும் நளினம் ஒன்று சேர்ந்த
அழகிய பாவை நடந்து வரும்
அழகினை காண!
அன்பிற்க்கு அடங்கா ஆடவனும்
அடங்கிபோவான் அழகி அவளின்
ஆணவத்தைக் (திமிர்) கண்டால்,
ஆயிரம்முரை சேலை அணிந்து
அவள் நிலவினை நிமிர்ந்து
பார்த்தால் ஆனால்
அழகி அவளின் முகத்தை காண
அழகின்றி தவித்தது நிலவு,
ஆயிரம் ஆடைஇருந்தும் அவள்
நேசித்த சுகம் சுடிதார் ஆனால்
அவளை நேசித்த சுகம்
தாவனி மட்டுமே!,
அழகே
உன்னை வர்ணிப்பதால்
அழகு என்னும் வார்த்தை உள்ளதா?!
இல்லை
அழகு என்னும் வார்த்தை இருப்பதே
உன்னை வர்ணிப்பதற்க்கா?!
என தெரியாமல் மூழ்கி
கிடக்கிறேனடி!
அழகே உன் அழகில்!!!!!!