இந்தியா

கேரளா மண்சரிவு – பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு: மீட்புப் பணியில் இராணுவத்துடன் இணைந்த இஸ்ரோ

இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கன மழை கொட்டித் தீர்த்தமையால் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான மக்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

தற்போது பலி எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ளது.

மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், 3500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய ஆய்வு விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை ரிசாட் சார் (Risat star) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து , அதுகுறித்து தகவல்களை அறிவித்துள்ளது.

அதன்படி, மண்சரிவு சுமார் 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும் சிக்குண்டவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அனைத்து பகுதியும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் மீட்புப் பணிகளில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஸ்கேனர் உதவியுடன் சிக்குண்டவர்களை கண்டறிய முடியும்.

இதில் 1000க்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.