கவிதைகள்

அப்பாச்சி…. கவிதை … முல்லை அமுதன்

அப்பாச்சி அடிக்கடி சொல்வாள்.
சரியான இடம் அவள் ஞாபகத்தில் இல்லை.
அப்பாவும் பெரிதுபடுத்தவில்லை.
இரவுக்காட்சி பார்த்துவிட்டு பயத்தில்
மாட்டுக் கொட்டிலில் படுத்துத் தூங்குகையில்
கைவிளக்குடன் வந்த அப்பா
வீட்டினுள்ளே அழைத்துவந்தார்.

அம்மாவுக்கு அருகில் தூங்கினேன்.
விளக்கின் ஒளியில் அம்மாவின் முகம் தெரிந்தது.
தூரத்தே சிறுவெளிச்சமாய்…

அப்பா சுருட்டை நான்காவது
தடவையாகவும் பற்றவைத்து தோற்றுப்போகிறார்.
ஒருநாள் சுற்றிவளைத்த சப்பாத்துக்கால்கள்
அதே மாட்டுக்கொட்டிலில் சுட்டுவிட்டுச் சென்றனர்.

அப்பாச்சியின் அம்மா புதைத்த இடத்தில்.
அப்பாச்சிக்கு புதையல் பற்றிய
ஞாபகம் இப்போது வந்திருந்தது.

முல்லைஅமுதன்
02/08/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *