முச்சந்தி

6 வருடங்களுக்கு பின் சம்பியனாகிய 20 வயதுப்பிரிவு: 5ஆவது வருடமும் சம்பியனாகிய தருணம்

வடக்கு மாகாண மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியின் 17, 20 வயதுப்பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகள்  யாழ். இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். இந்துக் கல்லூரி அணி களமிறங்கியது.

போட்டியின் முடிவில் 56 : 33 என்ற என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி தொடர்ச்சியாக 5 வருடங்களாக மாகணா மட்ட சம்பியனாகி சிறப்பு வெற்றியை பதிவு செய்தது.

மாலையில் நடைபெற்ற 20 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். இந்துக் கல்லூரி அணி களமிறங்கியது.

மிக விறுவிறுப்பாக மேலதிக நேரம் வரையில் நடைபெற்ற போட்டியின் முடிவில் 68:67 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ் இந்துவின் 20 வயதுப்பிரிவு அணி 6 வருடங்களுக்கு பின் சம்பியனாகி வெற்றியை பதிவு செய்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *