மோடியின் பாதுகாப்புக்கு 506.32 கோடி நிதி ஒதுக்கீடு; தமிழகத்துக்கு முக்கியத்துவம் இல்லா 2024 – 25 பட்ஜட்
இந்தியாவின் புதிய வரவு செலவு திட்டத்திற்கு முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு – செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றில் தாக்கல் செய்தார்.
இதன்போது, பிரதமர் மோடியை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு 506.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கான பெண்கள்-குறிப்பிட்ட திறன் திட்டங்கள், சிறுவர்களுக்கான புதிய NPS வாத்சல்யா திட்டம் அறிவிக்கப்பட்டது.
மறைமுக வரி கட்டமைப்பை எளிமைப்படுத்தவும் பகுத்தறிவுபடுத்தவும் நிதி அமைச்சு நோக்கமாக உள்ளது. 14.01 இலட்சம் கோடி ரூபாய் மொத்த கடன் வாங்கும் இலக்கை அறிவித்தது. மேலும், மொபைல் போன்கள் மற்றும் துணைக்கருவிகள் மீதான சுங்க வரி குறைப்பு தொடர்பாகவும் குறித்த 2024-25 வரவு – செலவு திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய வரவு – செலவு திட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக அசாம், இமாச்சல், உத்தராரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு 11,500 கோடி ஒதுக்கியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி ஒதுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து சபையில் அமைச்சர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து “இந்த பட்ஜெட் வழக்கம் போல பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது” – என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2024 -25 வரவு – செலவு திட்டம் தொடர்பாக காங்கிரஸின் எம்.பி ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது. நண்பர்களை சமாதானப்படுத்துகிறது. சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். காங்கிரசின் முந்தைய பட்ஜெட் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது“ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுவரை காலமும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்முறை குறைவான நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளதாக சன் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.