இந்தியா

Update- பங்களாதேஷில் தொடரும் வன்முறை; உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

பங்களாதேஷில் பெரும் வன்முறைக்கு காரணமாக இருந்த அரசு வேலைகளுக்கான பெரும்பாலான ஒதுக்கீட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்துள்ளது.

இதன்படி, ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்திய கீழ் நீதிமன்ற உத்தரவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 93 வீத அரசாங்க வேலைகள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பங்களாதேஷில் வெடித்த பெரும் வன்முறைக் காரணமாக 133 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் தொடரும் வன்முறை – ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து, போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

வன்முறை காரணமாக இதுவரையில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் டாக்காவின் தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் வியாழன் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த புதன்கிழமை முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற போராடியவர்களின் குடும்பங்களுக்கு 30 வீத இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு வேலைகளுக்கான ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் கோபத்தைத் தொடர்ந்து நாடு தழுவிய அமைதியின்மை வெடித்தது.

பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் 2018 இல் ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தது, எனினும், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதை கடந்த மாதம் மீண்டும் நடைமுறைப்படுத்தியது.

ஷேக் ஹசீனா இந்த ஆண்டு நான்காவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க தெரிவுசெய்யபட்டதில் இருந்து மிகப்பெரிய போராட்டமாக இது மாறியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை சனிக்கிழமையன்று பங்களாதேஷிற்கான பயண ஆலோசனையை நான்காவது நிலைக்கு உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்காதேஷிலிருந்து தப்பிச் சென்ற இந்திய மாணவர்கள்

பங்களாதேஷ் அரசாங்கம் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வன்முறை காரணமாக தலைநகர் டாக்காவில் மேலும் 35 பேர் உயிரிழந்ததன் பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு இடம்பெறுவதாகவும், இதனை இரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 30 சதவீத இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நிதிமன்றம் சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற கூறி தீர்ப்பை இரத்து செய்தது.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் முதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்ததையடுத்து போராட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியதுடன் இந்தியர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேவர வேண்டாம் என்றும், அவசர உதவி என்றால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இவ்வாறிருக்க 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்புகளை மேற்கொள்கின்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் இடம்பெற்ற இந்த வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Oruvan

Rayhan Ahmed

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.