இந்தியா
காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோ படை வீரர்களை இந்திய ராணுவம் களமிறக்கி உள்ளது!
காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீபகாலமாக ராணுவ வீரர்களின் மரணம் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டிவிடவும், தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தானில் நன்கு பயிற்சி பெற்ற 55 பயங்கரவாதிகள் அம்மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களை வேட்டையாடுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் 500 பேரை இந்திய ராணுவம் களமிறக்கி உள்ளது.
மேலும் நவீன ஆயுதங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களுடன் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒழிக்கும் பணியில் ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.