நாய்களை துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்; 249 ஆண்டுகள் சிறை தண்டனை
உலகம் முழுவதும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. பெண்கள், சிறுவர்கள் தொடங்கி விலங்குகளையும் விட்டு வைப்பதில்லை.
அந்த வகையில், பிரிட்டனைச் சேர்ந்த விலங்கியல் நிபுணரும் முதலைகள் ஸ்பெஷலிஸ்ட்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி அவற்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இவரால் துன்புறுத்தப்பட்டு, துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட 39 நாய்கள் உயிரிழந்துள்ளன.
அத்தோடு நிறுத்திக்கொள்ளாத பிரிட்டோன், இவரது லீலைகளை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
இதனால் விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. தான் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார் பிரிட்டோன்.
விலங்குகளை சரிவர பாதுகாத்து, பராமரிக்க முடியாமல் அவதியுறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
பாரப்பிலியா (Paraphilia) எனும் மனநோயே இவரது இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், உயிரற்ற பொருட்கள் மீது பாலியல் ஆசை கொண்டிருப்பர். ஆனால், பிரிட்டோன் இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று விலங்குகள் மீது ஆசை கொண்டுள்ளார்.
இவர் நாய்களை துஷ்பிரயோகம் செய்யும்போது அவற்றை வீடியோவாக எடுத்து மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
உயிரிழந்த நாயின் உரிமையாளர் ஒருவர் இந்த வீடியோவை பார்த்ததையடுத்து, பொலிஸில் புகாரளித்துள்ளார். இதன் பின்னரே பிரிட்டோவின் இந்த குற்றச் செயல்கள் வெளியுலகத்துக்கு தெரிய வந்துள்ளன.
இந்நிலையில் பிரிட்டோனின் செயல்களை கண்டித்த அவுஸ்திரேலிய நீதிமன்றம் அவருக்கு 249 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()