ஜப்பானில் பரவும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்று: கர்ப்பிணித்தாய்மார்கள் ஐவர் உயிரிழப்பு

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றினால் ஜப்பானில் ஐந்து கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மகப்பேற்றியல் மற்றும் மகப்பேற்று நிபுணர்கள் சங்கம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்று, மூக்கு மற்றும் தொண்டை வழியா ஏற்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு முகக்கவசம் அணியுமாறும் மகப்பேற்றியல் மற்றும் மகப்பேற்று நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றினால் 19 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020 முதல் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் எந்தவொரு உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தொற்றானது கொவிட் – 19 தொற்றுடன் ஒத்துப்போவதாக குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, இந்த வருடத்தில் 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 941 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button