முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இருந்து ஹமாஸ் விலகல்

காசா போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இருந்து ஹமாஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிக்கின்றன.

இஸ்ரேலிய படுகொலைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் அதன் அணுகுமுறை காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, காசா மீது இஸ்ரேல் வான் வழித்தாக்குதல் நடத்திய நிலையில், கடந்த சனிக்கிழமை (13) ஹமாஸ் தளபதியை குறிவைத்ததாக ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 92 பேர் பலியாகியதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மத்தியஸ்தர்கள் மற்றும் ஏனைய நாடுகளை வலியுறுத்துவதாக ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button