உலகம்

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்; 71 பாலஸ்தீனியர்கள் பலி

காசாவின் ஹான் யூனிசில் உள்ள அல்மவாசி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 71 கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாசின் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் பாதுகாப்பு வலயம் என அறிவித்த பகுதியிலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

289 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்த தாக்குதல் குறித்து விசாரணைகைளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற பகுதி பூகம்பம்தாக்கிய பகுதி போல காணப்படுவதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.