பூமியை விட நிலவின் நேரம் வேகம் அதிகரிப்பு!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அங்கு மனிதர்கள் தரையிறங்கக்கூடிய இடங்களை கண்டறிந்துள்ளது.

சந்திரனின் தென் துருவம் என்பது சூரியனில் இருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் ஒரு பகுதி. இங்கு மனிதர்கள் கால் பதிக்க வசதியான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 1969 ஆம் ஆண்டு நாசா தனது அப்போலோ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன்பின், தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவுசெய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது.

இந்நிலையில், நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில், நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.

52 ஆண்டுகளுக்கு முன் விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர். அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான் நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button